’என் அப்பாவுக்கு மொட்டை போடணும்’.. சலூன் உரிமையாளரை அழைத்து சென்று ரூ.20,000 அபேஸ்!
சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி 6வது தெருவில் வசிப்பவர் ராம்பால் (42). இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 31ம் தேதி மாலை முனுசாமி (36) என்பவர் வந்து, கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு தனது தந்தைக்கு மொட்டை போட வேண்டும் என ராம்பாலை அழைத்துச் சென்றார்.
இதையடுத்து, ராம்பாலிடம் கத்தியை காட்டி மிரட்டி முனுசாமி பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ராம்பாலின் செல்போனை பறித்து கூகுள் பே மூலம் அவரது வங்கிக் கணக்கில் ரூ. 20,000 ரூபாய் செலுத்திவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ராம்பால் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பெரம்பூர் சுப்பிரமணிய பாரதி தெருவில் உள்ள அவரது வீட்டில் முனுசாமியை இன்று காலை கைது செய்தனர்.
அப்போது, கொடுங்கையூர் ஆர்.வி.நகர் பகுதியில் கத்தியை பதுக்கி வைத்திருந்ததாக கூறியதால், போலீசார் அவரை அழைத்து சென்று கத்தியை கைப்பற்றினர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கீழே விழுந்த முனுசாமியின் வலது கை முறிந்தது. இதனால் முனுசாமி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டு கட்டப்பட்டது. இதையடுத்து முனுசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!