’திருமணத்திற்கு முன் உன்னை பார்த்து பேசணும்’.. நம்பி சென்ற பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது!
மணலி குமரன் நகரை சேர்ந்த 24 வயது பெண். திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்த மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பூர்ணநாதன் (28) என்பவர் கடந்த 18ம் தேதி இளம்பெண்ணின் உறவினர்களிடம் செல்போனில் பேசினார்.அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த அவர், அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், சூரிய உதயத்தின் போது உன்னை பார்த்து பேச வேண்டும் என ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து கடந்த 22ம் தேதி மேற்கு மாம்பலம் தெற்கு கவரி தெருவில் உள்ள பூர்ணநாதன் வீட்டுக்கு அந்த பெண் சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பூர்ணநாதன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அவரை தடுக்க முயன்றார். இதையடுத்து கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க செயினை அப்பெண்ணிடம் பூர்ணநாதன் கேட்டுள்ளார்.
கொடுக்க மறுத்ததால், கன்னத்தில் அறைந்து, செயினை பறித்து சென்றார். பின்னர், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், குமரன் நகர் போலீஸார், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பூர்ணநாதனை நேற்று கைது செய்தனர். அவர் மேற்கு மாம்பலத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 கிராம் தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!