’64 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செஞ்சாங்க’.. பகீர் கிளப்பிய தடகள வீராங்கனை!
கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை ஒருவர், தான் குழந்தையாக இருந்தபோது 64 நபர்களால் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி குழந்தைகள் நலக் குழுவில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், 13 வயது முதல் 5 ஆண்டுகள் இந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறையால் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 60க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பத்தனம்திட்டாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பயிற்சியாளர் மற்றும் சக விளையாட்டு வீரர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சுபின், சந்தீப், வினீத், ஆனந்து, ஸ்ரீனி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதாக குழந்தைகள் நலக் குழுவும் காவல்துறையும் உறுதியளித்துள்ளன. பல்வேறு நபர்களால் தடகள வீராங்கனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!