கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அதிர்ச்சி.. திடீரென சுருண்டு விழுந்த உயிரிழந்த வீரர்!

 
விஜய் படேல்

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென சரிந்து விழுந்து உயிரிழக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அப்படிப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜல்னாவில் உள்ள ஃப்ரேசர் பாய்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது, ​​விளையாடிக் கொண்டிருந்த வீரர் ஒருவர், சக வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, ​​திடீரென சுருண்டு விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த வீரர் விஜய் படேல் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web