அன்புத் தம்பி விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! கொந்தளிக்கும் சீமான் !

 
அன்புத் தம்பி விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! கொந்தளிக்கும் சீமான் !


நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு சலுகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என தீர்ப்பளித்து ரூ1,00,000/- அபராதம் விதித்தது.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகராக திகழும் அன்புத்தம்பி விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்குச் செலுத்தவேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல.

அன்புத் தம்பி விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! கொந்தளிக்கும் சீமான் !


இது வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல.அவர் முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்தப்படுகிறார். அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டதில் வரிஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் வெளியிடப்படவில்லை.
அச்சோதனைகளின்போது விஜய் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட முடியவில்லை. இது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடே.
தனக்கான நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு.

இதே விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு வரிவிலக்குச் சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள். விஜய்யை குற்றவாளிபோல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது நியாயமில்லை. வரிவிதிப்பு என்பது ஏழை மக்களைச் சுரண்டாத வகையில் அமைக்க வேண்டும். குறிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்த பிறகு, வியாபாரிகள், தொழில் துறையினர் முதல் எளிய மனிதர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .


நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு வயது அன்பு மகள் மித்ரா முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயைக் குணப்படுத்த தேவைப்படும் ரூ.16 கோடிக்கு 6 கோடி ரூபாய் வரி என்றால் இந்த நாடு எதை நோக்கிச் செல்லுகிறது? பல ஆயிரம் கோடியிலான மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டைவிட்டுத் தப்பும்போது என்ன செய்தார்கள்?

வரி என்பது மக்களிடமிருந்து பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையாய் இருக்கக் கூடாது வரி போன்ற அரசின் கொள்கை முடிவுகளே மக்களுக் கெதிராக உள்ளது. வழக்கு தொடுத்த நடிகர் விஜய்யின் மீது எந்த பிழையும் இல்லை. தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, அவரைப் பழிவாங்கத் துடிப்பது என்பது மிகவும் மலிவான அரசியலாகும்.
“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல, தம்பி விஜய் மிகுந்த உள உறுதியோடு முன்னேறி வர வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

From around the web