தவெக மாநாட்டில் கலந்து கொள்வேன்... நடிகர் விஷால் பரபரப்பு !

 
விஷால்

சென்னை தேனாம்பேட்டையில்  நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த சமயத்தில் விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு  விஷால், “வாக்காளர் என்ற முறையில் தவெக மாநாட்டில் கலந்து கொள்வேன்.  விஜய் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமலேயே செல்வேன்.  அவருடைய கருத்து, அவர் என்ன மக்களுக்கு கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே மாநாட்டுக்கு செல்வேன்.  

விஜய்


தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பது குறித்து  இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். விஜய் முதல் அடி வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார் ? அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் கட்சியில் இணைவேனா என்பது குறித்து  முடிவெடுப்பேன். 

விஜய்
 தமிழக வெற்றி கழக கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.  சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான். நானும் ஒரு அரசியல்வாதி தான்.” எனக் கூறியுள்ளார்.  ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் குளறுபடிகள்  குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “அவங்கவங்க பிரச்சனை; அவங்கவங்க கருத்து; அவங்க சர்ச்சை; அவரவர் திணிப்பு; அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை” என பட்டும் படாமலும்  தெரிவித்தார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web