“என் கடமைகளை நிறைவேற்றுவேன்...” கொல்கத்தா குற்றவாளிக்காக ஆஜராகும் கபிதா சர்க்கார் .. யார் இவர்?!

 
சஞ்சய் கவிதா கொல்கத்தா மருத்துவ

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள டி சீல்டா நீதிமன்றம், ஆர்ஜி மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமான கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் சார்பாக வழக்கறிஞர் கபிதா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியில் 31 வயதான பயிற்சி மருத்துவ மாணவி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியன்று படுகொலைச் செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஐ நடத்திய பாலிகிராஃப் சோதனையின் போது சஞ்சய் ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனினும், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தன்னை நிரபராதி என்று கூறி வருவதாகவும், உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக பாலிகிராஃப் சோதனைக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகவும் அவரது வழக்கறிஞர் கபிதா சர்க்கார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்... உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் கூறிய அதிர்ச்சி தகவல்கள்!

பாலிகிராஃப் சோதனைக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புதல் அளித்தபோது, ​​​​அவர் அங்கு இருந்ததாக கபிதா சர்க்கார் கூறினார். அவர் மீதான குற்றச்சாட்டுகளால் மன அழுத்தத்தில் இருந்ததால் பாலிகிராஃப் சோதனைக்கு அவர் தயாராகி விட்டதாகவும் கபிதா சர்க்கார் தெரிவித்தார்.

கபிதா சர்க்கார் கடந்த 25 ஆண்டுகளாக வழக்கறிஞர் பணி செய்து வருகிறார். ஹூக்ளி மொஹ்சின் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்ற அவர் அலிபூர் நீதிமன்றத்தில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் அங்கு சிவில் வழக்குகளை எதிர்த்து வாதிட்டு வந்தார். அதன் பிறகு, அவர் தெற்காசிய சட்ட சேவை சங்கத்தில் (SALSA) சேர்ந்து கிரிமினல் வழக்குகளை எதிர்த்து வாதிடத் தொடங்கினார்.

கொல்கத்தா மருத்துவர்

ஜூன் 2023ல், சகர் சீல்டா நீதிமன்றத்தில் சேர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டாலும், ஒவ்வொருவருக்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் கவிதா. 

கொல்கத்தா வழக்கில் பிரதான குற்றவாளியின் சார்பில் ஆஜரான கபிதா சர்க்கார், வழக்குகளை எதிர்த்துப் போராடுவது தனது வேலை என்றும், வழக்கறிஞராக தனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் கூறினார். வக்கீல் கபிதா சர்க்கார் மரண தண்டனைக்கு எதிரானவர் மற்றும் ஆயுள் தண்டனையை 'கடினமான' தண்டனையாக கருதுகிறார் என்று நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web