அரசு ஊழியர்களே உஷார்... அடையாள அட்டை கட்டாயம்!

 
அரசு ஊழியர்கள்

 தமிழகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து  அரசு ஊழியர்களுக்கும்  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் அரசால் வழங்கப்பட்டுள்ள  அடையாள அட்டைகளை சரியாக அணிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் ஊழியர்கள் பலரும் அதில் ஆர்வம் காட்டுவதோ அணிந்து கொள்வதே அறவே இல்லை என பல துறைகளில்  புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அரசு ஊழியர்கள்

இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web