“தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள்!” - ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜூனா சவால்!
தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு வழங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, "தமிழக முதல்வர் புதுச்சேரி அரசின் சட்டம்-ஒழுங்கைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குச் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று (டிசம்பர் 9) நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா கூறியவை: "வெள்ளத்தை நிறுத்த முடியுமா? காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ, அப்படிதான் த.வெ.க.வை நிறுத்த முடியாது. தில் இருந்தா தேர்தல்ல மோதுங்க!"

"புதுச்சேரி போன்ற பாதுகாப்பு தமிழ்நாட்டில் கொடுக்கப்படவில்லை. தமிழக முதல்வர் புதுச்சேரி அரசின் சட்டம்-ஒழுங்கைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி முதல்வருக்கு நன்றி. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் சேர்த்து விஜய் மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். வழியில், அடுத்த 50 வருடங்களுக்குப் புதுச்சேரி வரலாற்றை மாற்றத் த.வெ.க. தலைவர் காத்திருக்கிறார்.

விரைவில் மதுரையில் நடந்தது போன்ற மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை புதுச்சேரியிலும் நடத்துவோம். ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பகிரங்கமாக ஆதவ் அர்ஜூனா விடுத்துள்ள இந்தச் சவால், தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
