3 நாள் சும்மா இருந்தாலே HMPV வைரஸ் போயிடும்... மா.சுப்பிரமணியன் அட்ராசிட்டி!

 
மா.சுப்பிரமணியன்

 
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில்  சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை  பாதிக்கும் HMPV வைரஸ் குறித்தும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் HMPV எனும் வைரஸானது வீரியமிக்க வைரஸ் இல்லை. இதற்கான பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. இதற்கு ஒரே மருந்து, ஒரு 3 முதல் 5,6 நாட்கள் சும்மா இருந்தாலே போய்விடும் என்பது தான். இதற்கான நாம் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டிய பரிசோதனை செய்ய வேண்டிய நிலை கூட இல்லை.

மா.சுப்பிரமணியன்
நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு HMPV வைரஸ் தொற்று கூட இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தானாகவே போய்விடும். இதற்காக பயப்பட வேண்டியதில்லை. பதட்டம் கொள்ள தேவையில்லை. பிரத்யேக தனி படுக்கைகள் கூட தேவையில்லை. 

2019ல் கொரோனா பரவத் தொடங்கிய போது WHO (உலக பொது சுகாதார அமைப்பு) ஒரு மருத்துவ அவசர பிரகடனத்தை அறிவித்தது. அதே போல் குரங்கம்மை பரவிய காலத்தில் WHO அவசரநிலை பிரகடனபடுத்தியது.  தமிழகத்திற்கு வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை  கண்காணிக்க அறிவுறுத்தபட்டது. ஆனால், HMPV தொற்று குறித்து பெரிய அளவில் அச்சப்பட வேண்டாம்.

மா.சுப்பிரமணியன்

சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை, அனைத்து மாநில சுகாதாரத்துறை ஆணையர்களையும் அழைத்து, இதையே கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்தவித காய்ச்சல், சளி இருப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் கூட்டமான இடங்களுக்கு சீழ்க்கையில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.” என  மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web