சட்டவிரோதமாக குடியேறிய மக்கள்.. முதற்கட்டமாக 538பேர் கைது செய்து நாடு கடத்திய அமெரிக்க ராணுவம்!

 
அமெரிக்க குடியேறிகள்

200 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் அவர் தீவிரமாக உள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கிவிட்டார். அதன்படி, சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: - டிரம்ப் நிர்வாகம் 5.38 சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்தது. இதில் ஒரு பயங்கரவாதி, ட்ரென் டி அரகுவா கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோத குற்றவாளிகள் அடங்குவர். டிரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தியுள்ளது.

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பான தகவல்கள் வெள்ளை மாளிகையின் ட்விட்டர் கணக்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் இது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் கைது செய்யப்பட்ட சிலரின் பெயர்களையும் அவர்கள் செய்த குற்றங்களையும் பட்டியலிடுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web