'நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள்.. கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி'... மேரி கோம் நெகிழ்ச்சி!

“நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கடந்த ஜனவரி 13ம் தேதி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி துவங்கியது. வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 42, மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நேற்று பிரயாக்ராஜுக்கு வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். புனித நீராடியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!