’நான் அமெரிக்க மாடல்’.. ஆசை வார்த்தை கூறி 700 பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது!

 
துஷார் சிங்

டெல்லியை சேர்ந்த துஷார் சிங் பிஷ்ட் என்ற 23 வயது இளைஞர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் டேட்டிங் ஆப்ஸ் மூலம் இளம் பெண்களை குறிவைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கிய துஷார் சிங், 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தார். துஷார் சிங் அவர்களிடம், தான் ஒரு அமெரிக்க மாடல் என்றும், திருமணம் செய்ய பெண் தேடுவதற்காக இந்தியா வந்ததாகவும் கூறினார்.

குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

இதை நம்பிய பல இளம்பெண்கள் இவரின் வலையில் விழுந்துள்ளனர். அந்த பெண்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, துஷார் சிங் அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டார். பெண்களும் அவருக்கு அனுப்பி வைத்தனர். இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்ற பிறகு, துஷார் சிங் தனது வேலையைக் காட்டத் தொடங்கினார். அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி சம்பந்தப்பட்ட பெண்களிடம் துஷார் சிங் பணம் பறிக்க முயன்றார். இவரது மிரட்டலால் பல பெண்கள் பணம் கொடுத்துள்ளனர். இவ்வாறு நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி வந்துள்ளார் துஷார் சிங்.

கைது

இந்நிலையில், துஷார் சிங்கால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், துஷார் சிங்கின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துஷார் சிங், அமெரிக்க மாடல் என்று கூறி இதுவரை சுமார் 700 பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. மோசடிக்கு அவர் பயன்படுத்திய  தொலைபேசி மற்றும் 13  கிரெடிட் கார்டுகள் போலீசார் கைப்பற்றியுள்ளனர். துஷார் சிங்கிடம் இதுவரை எத்தனை பெண்கள் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web