”தல சீறிப்பாய்வதை காண ஆவலாக உள்ளேன்!”... அஜித்தை புகழ்ந்த நடிகர் மாதவன்

 
அஜீத் மாதவன்

 தமிழ் திரையுலகில் மேடி சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் மாதவன். இவர் திரைப்பட நடிகர்,  தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2000ல்  வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். - முதல் படமே  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து  இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித்திற்கு சாக்லேட் பாய் மாதவன், “அஜித்குமார் ரேசிங் அணி ட்ராக்கில் சீறிப்பாய்வதை காண ஆவலாக உள்ளேன். என்ன ஒரு அற்புதமான மனிதர். என்ன நடந்தாலும் அவரின் கனவுகளை நோக்கி சென்றுக் கொண்டே இருக்கிறார்!" என பதிவிட்டுள்ளார்.  அஜித்குமார் ஐரோப்பாவில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள GT4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். -  மாதவனின் நடிப்பில் வெளியான  விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.  ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். கடந்த 2022ல் வெளியான  ராக்கெட் நம்பி விளைவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தின் மூலம் மாதவன் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியான இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது.

மாதவன் ஒரு ஜீனியஸ்!சமந்தா உருக்கம்!

அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மாதவன் போட்டிருக்கும் பதிவு தான் வைரலாகி வருகிறது. அதன்படி  28 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய படப்பிடிப்பு சமயத்தில் தன்னுடைய லட்சியம் குறித்து ஆண்டு புத்தகத்தில் மாதவன் குறிப்பிட்டு இருக்கும் விஷயத்தை தான் இன்ஸ்டாவில் போட்டிருந்தார்.   அந்த புகைப்படத்தில் மாதவனின் படத்திற்கு பக்கத்தில் லட்சியம் எனக் குறிப்பிட்ட இடத்தில் பணக்காரராகவும், பிரபல நடிகராகவும் ஆக வேண்டும். மாதவன் சொன்னது: அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். சிலவற்றில் மாஸ்டராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை தான் மாதவன், பதிவிட்டு நான் எழுதிய லட்சியத்தில் கொஞ்சமாவது சாத்தியமாகி இருக்கிறது எனக் கூறியுள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  
 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web