“எனக்கு கல்யாணமாயிடுச்சு...” காதலன் சொன்னதைக் கேட்டு தீக்குளித்த காதலி உயிரிழப்பு!
இருவரும் ரெண்டு வருஷமா காதலித்து வந்த நிலையில், திடீரென எதுவுமே சொல்லாமல், பெற்றோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட இளைஞர், காதலியிடம், ‘எனக்கு கல்யாணமாயிடுச்சு... இனி தொந்தரவு பண்ணாதே’ என்று கூறியது கேட்டு தீக்குளித்து காதலி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு தேனி மாவட்டத்தில் வசித்து வந்த பிரகாஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த பிரகாஷ், அவரிடம் இருந்து சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் பறித்து இருக்கிறார். இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என கூறி இருக்கிறார். இதனால் மனமுடைந்த இளம்பெண், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் காவல்துறையினரிடம் பெண் மரண வாக்குமூலம் பதிவு செய்யவே, பிரகாஷை அதிகாரிகள் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!