2025ல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் தொழிலில் வெற்றி.. கொட்டப் போகுது பண மழை!

 
புதன் குரு ராசிபலன்  ஜோதிடம்
புது வருஷம் புத்தொளி வீச தொடங்க இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. இந்த புது வருஷத்தில் மீன ராசியில் இருந்து ராகு பகவான் கும்ப ராசிக்கும், கன்னி ராசியில் இருந்து கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.  அதனால் இந்த புத்தாண்டில் இந்த மூன்று ராசிக்காரர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போகிறார்கள். இவர்களுக்கு நற்பலன்களும், யோகங்களும் கிடைக்கப் போகிறது. பணமழையில் நனைய போகும் ராசிகள் என்று கூட சொல்லலாம். 

ராகு கேது பெயர்ச்சி 2025 மே மாதத்தில் நிகழ உள்ளது. ராகு  கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். கேது சிம்ம ராசிக்குள் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். 

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

மிதுனம்:

சிம்ம ராசிக்குள் நுழையும் கேது மிதுன ராசியின் மூன்றாவது வீட்டிற்குச் செல்கிறார். இதனால் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் உண்டாகும். எந்த துறையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். நீண்டநாட்களாக ஆசைப்பட்டவை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீடு, நிலம் போன்ற சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. 

ராகு கேது பெயர்ச்சி பகவான் ஜோதிடம்

துலாம்:

கேது துலாம் ராசியின் 11ம் வீட்டிற்கு செல்கிறார். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வருமானம் பெருகும், கையில் பணம் தங்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

மீனம்:

மீன ராசியின் 6ம் வீட்டிற்கு கேது செல்கிறார். 2025 மே மாதம் முதல் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் மீன ராசிக்கு சிறப்பான காலமாக இருக்கப் போகிறது. இதுவரை மேற்கொண்டு வந்த கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீங்கள் செய்யும் வேலைகள் உங்களுக்கு பாராட்டையும், பதவி உயர்வையும் பெற்றுத் தரும். வீடு, மனை போன்ற புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web