மழைக்கால சளி, இருமல் மற்றும் நோய் தொற்றுகளை தடுக்க இதை மறக்காம உணவில் சேர்த்துக்கோங்க!

 
சளி
தொற்று நோய்கள் பொதுவாக மழைக் காலங்களில் தீவிரமாக பரவும் தன்மை வாய்ந்தவை. இதனால் உடலில் தொற்று நோய்களை சமாளிக்க எதிர்ப்பு சக்திகள் உடலுக்கு தேவைப்படும் காலமும் கூட. அதிலும்  எளிதில் தாக்கக்கூடிய மழைக்கால இருமல், சளி, வயிற்றுப்போக்கு மற்றும் பல நோய்கள் வராமல் தடுக்க உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது. சில பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் பருவ நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.  

இஞ்சி

அதன்படி சமையலறையில் எல்லாக் காலங்களிலும் இருக்க வேண்டிய பூண்டு  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அவை நமது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் எளிதாக்குகின்றன. எந்த வகையான பருப்பு சமையலிலும் சில பற்கள் பூண்டை சேர்ப்பதால் உணவில் உள்ள வாயுவை குறைத்து ஆக்சிஜனேற்றத்துக்கு வழிவகுக்கிறது.  

அதே போல் காலை எழுந்ததும் இஞ்சி சேர்த்த தேநீரை அருந்தலாம். மழைக்காலங்களில் தொண்டைக்கு இதமாக மட்டுமல்ல உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது.வெதுவெதுப்பான இஞ்சி சாறில் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு பிழிந்தும் குடிக்கலாம்.  

பேரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிறந்த பழமாகும்.  இது பருவமழை காலத்தில் ஏற்படும் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.   இந்த பழத்தில் இயற்கையான ஆண்டிபிரைடிக் ஏஜென்ட் உள்ளது . 

அஞ்சறை பெட்டி  மசாலாப் பொருட்களின் ராஜாவாக மஞ்சள் கருதப்படுகிறது. இது ஒரு இயற்கை ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிபயாடிக் முகவர் ஆகும்.  தினமும் இரவு மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால்  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், உணவில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கவும் மஞ்சள் உதவுகிறது.

10 மிளகிருந்தால் பகைவின் வீட்டிலும் உணவருந்தலாம் என்பது பழமொழி . இதற்கேற்ப மழைக்காலங்களில் தினசரி உணவில் சிறிது கருப்பு மிளகு தூள் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இவை காய்ச்சல், இருமல், சளி, தசை வலி, மற்றும் பல்வேறு சுவாச பிரச்சனை  உள்ளவர்களுக்கு பலவகையான ஆச்சரியமான நன்மைகளை தரக்கூடியது. 
 மஞ்சள்
ஆப்பிள்கள் செரிமான அமைப்பு சரியாக செயல்படுவதை உறுதி செய்வதால் அவை மழைக்காலத்தில் உங்கள் உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.  துருவிய கேரட்டுடன் சில துருவி வறுத்த பீட்ரூட்டை சாலடாக கலந்து சாப்பிடலாம். இதனை மழைக்காலங்களில் அன்றாட உணவின் ஒரு பகுதியாக ஆக்கலாம். இந்தக்  கலவையில் 10 முதல் 12 வறுத்த பாதாமையும் சேர்க்கலாம். இதில் எள் தூவி சாப்பிட்டால் மேலும் சுவை கூடும்.   அதே போல் மழைக்காலங்களில் அருமருந்தாக இருப்பது க்ரீன் டீ. இவையும்  சிறந்த தொற்று நோய் நிவராணியாக செயல்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web