இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3-போட்டி ஒருநாள் தொடரில் இந்தியா கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பெர்த் மற்றும் அடிலெய்டில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இன்று சிட்னியில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்களில் 236 ரன்கள் செய்து ஆல் அவுட் ஆனது. ஹர்ஷித் ராணா இந்தியா தரப்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலக்கை நோக்கி இந்தியா தொடங்கிய ஆட்டத்தில் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா முதல் விக்கெட் 69 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில் 24 ரன்களில் வெளியேறிய பின்னர் விராட் கோலி ரோகித் உடன் இணைந்து அரைசதம் கடந்த விளையாட்டை வெளிப்படுத்தினார்.

ரோகித் சர்மா 121 ரன்களும், விராட் கோலி 74 ரன்களும் சாதனை விளையாடி இந்தியா 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பில் 237 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியுடன் 3-போட்டி ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, இவை இடையேயான 5-போட்டி டி20 தொடர் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
