உலகளாவிய நெருக்கடிகளில் முதலில் உதவிக்கரம் நீட்டுவது இந்தியா தான் ... பிரதமர் மோடி!

 
மோடி
 

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.14,260 கோடி மதிப்பிலான சாலை, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனுடன் நவராய்பூர் அடல் நகரில் அமைந்துள்ள சத்தீஸ்கர் விதானசபா புதிய கட்டத்தையும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையையும் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “உலகளாவிய எந்த நெருக்கடியிலும் முதலில் உதவிக்கரம் நீட்டுவது இந்தியா தான். நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளியாக இந்தியா எப்போதும் செயல்பட்டுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம். நான் விருந்தினராக இங்கு வரவில்லை, உங்களில் ஒருவனாகவே இருக்கிறேன்,” என்றார்.

மேலும் அவர், “சத்தீஸ்கர் மாநிலம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது நக்சல் வன்முறை மற்றும் பின்தங்கிய நிலைமையிலிருந்து செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையில் முன்னேறியுள்ளது. இதற்கு மக்களின் கடின உழைப்பும், பாஜக அரசுகளின் தொலைநோக்குத் தலைமையும் காரணம்,” எனக் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!