ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வி... கேப்டனாக கில் மோசமான சாதனை!

 
கில்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு தொடக்கமே திருப்திகரமாக அமையவில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. தொடரின் முதல் ஒருநாள் இன்று பெர்த் மைதானத்தில் மழை இடையூறுகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து 3 முறை மழை பெய்ததால், போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

கில்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறையில் ஆஸ்திரேலியாவிற்கு 26 ஓவர்களில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தொடர்களை வெற்றிகரமாக தொடங்கியது.

கில்

இந்நிலையில், கேப்டனாக சுப்மன் கில் கடுமையான எதிர்மறை சாதனையைச் சந்தித்துள்ளார். டெஸ்ட், ஒடிஐ மற்றும் டி20 – மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு முதல் போட்டியை வழிநடத்தியபோதே தோல்வி கண்ட கேப்டன்களில் விராட் கோலிக்கு பிறகு இரண்டாவது இந்திய கேப்டனாக கில் இணைந்துள்ளார். இந்த தோல்விக்குப் பின்னர், அணியின் அடுத்த ஆட்டங்களில் கிலின் கேப்டன்சி மீது கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?