இந்தியா, இலங்கைக்கு இடையேயான ஒரு நாள், டி 20 கிரிக்கெட் போட்டி! அட்டவணை வெளியீடு!

 
இந்தியா, இலங்கைக்கு இடையேயான  ஒரு நாள், டி 20 கிரிக்கெட் போட்டி!  அட்டவணை வெளியீடு!


இந்தியாவில் கொரோனா 2வது அலையில் பாதிப்புக்கள் பல மாநிலங்களில் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் முழு நேர அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இருஅணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 13ம் தேதி தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்தியா, இலங்கைக்கு இடையேயான  ஒரு நாள், டி 20 கிரிக்கெட் போட்டி!  அட்டவணை வெளியீடு!

முதல் ஒருநாள் ஆட்டம்: ஜூலை 13
2-வது ஒருநாள் ஆட்டம்: ஜூலை 16
3-வது ஒருநாள் ஆட்டம்: ஜூலை 18
இந்த ஒருநாள் ஆட்டங்கள் நிறைவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 21ல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முதல் டி20: ஜூலை 21
2-வது டி20: ஜூலை 23
3-வது டி20: ஜூலை 25

இந்த போட்டிகளை பொறுத்தவரை இந்தத் தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர் யாரும் விளையாட மாட்டார்கள் எனவும் இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

From around the web