இன்று 2வது டி20 போட்டி: முன்னிலையை தக்க வைக்குமா இந்தியா?! சென்னையில் மெட்ரோவில் இலவச பயணம்!

இன்று காலை சென்னையில் 2வது டி20 நடைபெற உள்ள நிலையில் முன்னிலையை இந்திய அணி தக்க வைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையை நீட்டிக்கும் முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளது. அதே சமயம் முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய போட்டியைத் தொடர்ந்து போட்டியைக் காண டிக்கெட் முன்பதிவு செய்துள்ள ரசிகர்கள் இன்று கட்டணம் ஏதுமில்லாமல் டிக்கெட்டைக் காண்பித்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!