அசத்தல்... வரலாற்றில் முதன் முறையாக இந்தியா 20 பதக்கங்களை வென்று சாதனை!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 20 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 பதக்கங்களை வென்றதே அதிகபட்ச பதக்கங்களாக இருந்து வந்தது. நேற்று ஒரே நாளில் நடைபெற்ற போட்டியில் மட்டும் 5 பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
அதன்படி நேற்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் சரத்குமார் வெள்ளிப் பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர். பாரா ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்தியா இதுவரை 3 தங்க பதக்கங்கள், 7 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.அதன்படி இதுவரை மொத்தமாக இந்தியா 20 பதக்கங்களை வென்றுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் சிறப்பான முறையில் விளையாடிய பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் தீப்தி ஜீவன் ஜி வெண்கல பதக்கமும், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அஜித் சிங் வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கல பதக்கமும் வென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 முறை பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!