ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: மகளிர் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!

 
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: மகளிர் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!

பெண்கள் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான லீக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: மகளிர் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!

தென்கொரியா, டாங்கே நகரில் 6-வது மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் இன்று தொடங்கி டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா மற்றும் இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து என ஆசியாவின் டாப் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டத்தின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: மகளிர் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!

இன்று தொடங்க இருக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சவிதா தலைமையிலான இந்திய அணி தாய்லாந்துடன் மோதுகிறது.இந்திய மகளிர் அணி முன்னதாக 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை கைப்பற்றியது. 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. இந்த வருடம் சவீதா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்த இந்திய மகளிர் அணி, அதன்பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web