இந்திய கடற்படைக்கு ரூ.2,900 கோடிக்கு ஏவுகணைகள்... ஒப்பந்தம் கையெழுத்து!

 
ஏவுகணை

இந்திய கடற்படைக்கு ரூ.2,960 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய ஏவுகணைகள் வாங்குவது குறித்து  பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய  பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பலில் இருந்து நெடுந்தூரம் தாக்கும் ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் மத்திய  பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

`ஏவுகணை
பாதுகாப்பு அமைச்சகம்  பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்  இணைந்து  இந்திய கடற்படைக்கு சுமார் ரூ. 2,960 கோடி செலவில் நடுத்தர தூர மேற்பரப்பு-விமான ஏவுகணைகளை  வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று ஜனவரி 16 வியாழக்கிழமை  புதுடெல்லியில் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

ஏவுகணை
இத்திட்டத்தின் மூலம் பல இந்திய கடற்படை கப்பல்களில்  ஏவுகணைகள்  பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை  சுதேசிமயமாக்குவதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web