உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை!
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
அடுத்து, 299 ரன்கள் இலக்காகக் கொண்டு பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தவுடன் முழுக்கடைசியாக சுருண்டது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
52 ஆண்டுகளாக நடந்துவரும் பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில், இந்திய அணி இதுவரை இரண்டு முறை (2005 மற்றும் 2017) இறுதி ஆட்டத்துக்கு வந்தும் தோற்றது. ஆனால் இம்முறை, அந்த ஏக்கத்தை தணித்து வரலாற்றில் இடம்பிடிக்கும் சாதனையைப் படைத்துள்ளது.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.39½ கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவுக்கு ரூ.19¾ கோடி பரிசும் வழங்கப்பட்டது. இந்திய அணியின் இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
