சர்வதேச மூத்தோர் தடகள போட்டி... பதக்கங்களைக் குவித்த தமிழக தம்பதியர்.. குவியும் வாழ்த்துகள்!

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியரைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில், 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 30 வயது முதல் 90 வயது வரையிலான 715 வீரர்,வீராங்கனைகள் கலந்துக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் மாஸ்டர்ஸ் அத்லடிக்ஸ் செயலாளரும், டிஎஸ்எம்சி சால்ட் கம்பெனி டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் கனகசபாபதி 4X100 மீ மற்றும் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்க பதக்கங்களும், இவர் மனைவி முத்துநகர் மாஸ்டர்ஸ் அத்லேட்ஸ் பொருளாளர் மகேஸ்வரி ஈட்டி எறியும் போட்டியில் தங்க பதக்கமும், குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களும் பெற்று வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற தம்பதியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!