உல்லாசத்திற்கு இடையூறு.. 5 வயது சிறுவனை கொன்ற கொடூரம்... ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 
 கார்த்திக்

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் 5 வயது சிறுவனைக் கொன்ற கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேனி மாவட்டம், கோம்பை காவல் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஐந்து வயது சிறுவன் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோம்பை போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கள்ளக்காதல்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கீதா, முருகன் தம்பதிக்கு  ஆண் குழந்தை தான் இறந்தது  என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீதா தனது 5 வயது மகன் ஹரிஷுடன் தனியாக வசித்து வந்தது தெரியவந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் கீதாவுக்கும் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்ததால், கார்த்திக் கீதா வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் சிறுவன் ஹரிஷ் தங்கள் உல்லாசத்திற்கு தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று கார்த்திக் சிறுவன் தலையில் செங்கலால் அடித்த கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 5 வயது சிறுவனை கொன்ற கார்த்திக் என்ற இளைஞரை கோம்பை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை அறிக்கையை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்தபோது, ​​ஆதாரங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் கார்த்திக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் கார்த்திக்கை மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web