விடிய விடிய போதை... நடிகை ரீமாவுடைய பார்ட்டியில் எத்தனை பேர் கன்னித்தன்மையை இழந்தாங்க தெரியுமா? அதிர வைத்த சுசித்ரா!

 
ரீமா சுசித்ரா

ஏற்கெனவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி பெறும் பரபரப்பை பற்ற வைத்திருக்கும் நிலையில், அடுத்த அணுகுண்டை வீசியிருக்கிறார் பாடகி சுசித்ரா. நடிகை ரீமா கல்லிங்கல் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் பாடகி சுசித்ரா. கொச்சியில் ரீமா கல்லிங்கலின் வீட்டில் போதைப்பொருள் பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதுபோன்ற பார்ட்டிகளில் சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

எஸ்எஸ் மியூசிக் யூ-ட்யூப் சேனலுடனான நேர்காணலின் கலந்துரையாடலின் போது பாடகி சுசித்ரா நடிகை ரீமா கல்லிங்கல் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இது போன்ற பார்ட்டிகள் ரீமாவின் கேரியரை பாதித்துள்ளது என்றும் சுசித்ரா கூறுகிறார். எந்த விருந்திலும் பயன்படுத்தக் கூடாத சில பொருட்கள் அந்த பார்ட்டியில் பயன்படுத்தப்பட்டதாகவும், ரீமாவின் பார்ட்டிகளில் பல பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை இழந்ததாகவும் தனக்குத் தெரியும் என்றும் சுசித்ரா கூறியிருக்கிறார். பெண்கள் பங்கேற்கும் இதுபோன்ற பார்ட்டிகளை நடத்தும் ரீமா கல்லிங்கலை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என்றும் அந்த பேட்டியில் சுசித்ரா ஆவேசமாக பேசியிருக்கிறார். 

ரீமாவின் வீட்டில் நடந்த பார்ட்டியில் எத்தனை பெண்கள் கலந்துகொண்டார்கள் என்று மக்களுக்குத் தெரியுமா என்றும், ரீமாவைப் பற்றி முதலில் கேட்டபோது தன்னால் நம்ப முடியவில்லை என்றும் சுசித்ரா கூறியிருக்கிறார். ரீமா வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட மலையாள பாடகிகள் சிலரை அங்கு பார்த்தது மனதை நெருடச் செய்வதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக சுசித்ரா கூறி இருக்கிறார்.

ரீமா கல்லீங்கல்

இந்த வீடியோ வெளியானதையடுத்து, நடிகை ரீமாவுக்கு எதிரான கருத்துகளில் கடுமையான மொழியில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரீமாவைப் பற்றி இவ்வளவு பகிரங்கமாகப் பேசிய பிறகும் அதிகாரிகள் ஏன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்ற கேள்வியும் எழுகிறது. 

மலையாள சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு குறித்தும் ஹேமா கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், ரீமா இதுபோன்ற விருந்துகளை நடத்தியதாக இதுவரை காவல்துறைக்கோ அல்லது விசாரணைக் குழுவுக்கும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளோ புகார்களோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web