அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல்…!

 
அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல்…!


தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் பல நாட்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை திரும்ப அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல்…!

மேலும் அ.தி.மு.க உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் நடத்தப்படும். அடுத்தகட்டமாக ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும், தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல்…!

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இம்மாதத்தில் வெளியிடப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உட்கட்சி தேர்தல்,கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என வரிசையாக அ.தி.மு.க.வில் பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. உள்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web