இன்று முதலீட்டாளர்கள் மாநாடு... முதல்வர் முன்னிலையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

 
ஸ்டாலின்
 

மதுரையில்   நடைபெற உள்ள தொடர் அரசியல், நிர்வாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரை வருகை தந்துள்ளார்.   அவரது வருகையை முன்னிட்டு மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சரை, விமான நிலையத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.  அவர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கருப்பாயூரணியில் நடைபெறும் ஒரு முக்கிய திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், மதுரை நகரின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விரகனூர் ரிங் ரோட்டில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதில் பல தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதன் பின்னர் உத்தங்குடியில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட விழாவில், மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் மதுரைக்கு குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதோடு, பல்வேறு புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!