குப்பையில் கிடந்த ஐபோன், 8 கிராம் தங்க செயின்.. பத்திரமாக மீட்டு ஒப்படைத்த பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!

சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள பொன்னப்பன் குறுக்குத் தெருவில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளரான சின்னம்மாள், குப்பையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் கிடப்பதைக் கண்டார். இது குறித்து அவர் தனது உயர் அதிகாரியிடம் தெரிவித்தார். ஐபோன் மொபைல் எண் மூலம் உரிமையாளர் நீலா மணிகண்டனைக் கண்டுபிடித்து, ஐபோன் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல், குப்பையில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 8 கிராம் தங்கச் சங்கிலியை மீட்ட இருதயமரி என்ற துப்புரவுப் பணியாளரும், தனது உயர் அதிகாரியிடம் இது குறித்துத் தெரிவித்தார். இதையடுத்து, தங்கச் சங்கிலி கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உரிமையாளரை கண்டறியும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், துப்புரவுப் பணியாளர்களான சின்னம்மாளுக்கும், இருதயமரிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஐபோன் உரிமையாளர் சின்னம்மாளுக்கு மனமார தனது நன்றியை தெரிவித்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!