ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.
🚨 NEWS 🚨
— IndianPremierLeague (@IPL) November 15, 2024
TATA IPL 2025 Player Auction List Announced!
All the Details 🔽 #TATAIPLhttps://t.co/QcyvCnE0JM
இந்நிலையில், ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இது குறித்த தவகலை ஐபிஎல் நிர்வாகம் இன்று நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 வீரர்கள் (3 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் உட்பட) வெளிநாட்டு வீரர்கள். இந்திய வீரர்கள் 366 பேரில் 318 பேர் அன்கேப்டு வீரர்கள். வெளிநாட்டு வீரர்களில் 12 பேர் அன்கேப்டு வீரர்கள்.
அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் 81 வீரர்கள் உள்ளனர். ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடி அடிப்படை விலையில் 18 வீரர்களும், ரூ.1 கோடி அடிப்படை விலையில் 23 வீரர்களும் உள்ளனர். 2 நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!