இன்று ஐ.பி.எல். 2 புதிய அணிகள் அறிவிப்பு! எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

இன்று ஐ.பி.எல். 2 புதிய அணிகள் அறிவிப்பு! எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறைகளை ஆகஸ்ட் இறுதியில் வெளியிட்டது. டெண்டர் விண்ணப்ப கட்டணம் ரூ.10 லட்சம்.

இன்று ஐ.பி.எல். 2 புதிய அணிகள் அறிவிப்பு! எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அணியின் அடிப்படை விலையாக ரூ.2000 கோடி .
அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து கிளப்பான மான்செடர் யுனைடெட், கோடாக் குரூப், அரோபின்டோ மருந்து நிறுவனம், ஜிண்டால் ஸ்டீல் ஆகியவை புதிய அணிகளை வாங்க போட்டாபோட்டியிட்டு வருகின்றன.

இன்று ஐ.பி.எல். 2 புதிய அணிகள் அறிவிப்பு! எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

சில நிறுவனங்களுடன் இணைந்து வாங்க முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய அணிகளுக்கான டெண்டர் பரிசீலனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7000 கோடி முதல் ரூ.10000 கோடி வரை வருவாய் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web