கட்டுக்கட்டாக ரூ.5 கோடி ரொக்கம்... அள்ள அள்ள தங்கம்... CBI ரெய்டில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி!

 
ரொக்கம்

 

பஞ்சாப் ரோபர் ரேஞ்சில் டிஐஜி ஆக பதவி வகித்து வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் மற்றும் அவரது இடைத்தரகர் கிருஷ்ணா ஆகியோர் சிபிஐ ரெய்டில் சிக்கினர். 
ரூ.8 லட்சம் லஞ்சம் பெறும் வழக்கு தொடங்கிய போது, சிபிஐ அதிகாரிகள் ஹர்சரண் சிங்கின் அலுவலகத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அதிகாரிகளின் சோதனையில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது:
கட்டுக்கட்டாக ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் 1.5 கிலோ தங்கம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டது. இதோடு  முடியவில்லை. சிபிஐ அதிகாரிகளின் சோதனையில் மெர்சிடஸ், ஆடி போன்ற சொகுசு கார்கள், 22 உயர் ரக வாட்ச்கள், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், டபுள் பேரல் ஷார்ட் கன், பிஸ்டல், ரிவால்வர், ஏர்கன் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது.  அதே போன்று இடைத்தரகர் கிருஷ்ணா வீட்டில் ரூ.21 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், “ஹர்சரண் சிங்கின் லஞ்சப்பணத்தில் சம்பாதித்தவை இன்னும் எத்தனை இடங்களில் பதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய சோதனைகள் தொடர்கின்றன. இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்றனர்.

யார் இந்த ஹர்சரண் சிங்?

2009ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். பாட்டியாலா ரேஞ்சின் டிஐஜி, விஜிலென்ஸ் பீரோவின் இணை இயக்குநர். மொஹாலி, சங்ரூர், கன்னா, ஹோஷியார்பூர், ஃபதேஹ்கர் சாஹிப் மற்றும் குருதாஸ்பூர் பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர். 2024 நவம்பர் மாதம் ரோபர் ரேஞ்சின் டிஐஜி, மொஹாலி, ரூப்நகர் மற்றும் ஃபதேகர் சாஹிப் மாவட்டங்களை மேற்பார்வை. முன்னாள் பஞ்சாப் டிஜிபி எம்எஸ் புல்லரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?