நாடு முழுவதும் IRCTC இணையதளம் முடங்கியது... ஒரே மாதத்தில் 3வது முறையாக செயலிழந்ததால் பயணிகள் கடும் அவதி!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) செயலி மற்றும் இணையதளம் இன்று டிசம்பர் 31ம் தேதி காலை மீண்டும் செயலிழப்பை எதிர்கொண்டது.
ஐஆர்சிடி செயலி மற்றும் இணையதளம் இந்த டிசம்பர் மாதத்தில் செயலிழப்பை எதிர்கொள்வது இது மூன்றாவது முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.
தற்செயலாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு 9.50 மணியளவில் ஐஆர்சிடிசி இணையதளமும், செயலியும் முடங்கியது.
பயனர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்நுழைந்தபோது, "அனைத்து தளத்திற்கும் முன்பதிவு செய்தல் மற்றும் ரத்துசெய்தல் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கிடைக்காது. சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம். ரத்து/கோப்பு TDRக்கு, வாடிக்கையாளர் பராமரிப்பு எண். 14646ஐ அழைக்கவும், 08044647999 & 08035734999 அல்லது etickets@irctc.co.in இல் அஞ்சல் செய்யவும்" என்கிற செய்தியை எதிர்கொண்டனர்.
இன்று காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கும் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. செயலிழப்பு குறித்து பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
டவுன்டெக்டரின் கூற்றுப்படி, சுமார் 47% பயனர்கள் இணையதளத்தை இன்று காலை அணுக முடியவில்லை. அதே நேரத்தில் 42% பேர் பயன்பாட்டில் சிக்கல்களை எதிர்கொண்டனர். 10% பேர் டிக்கெட் முன்பதிவுகளை முடிக்க முடியாமல் சிரமப்பட்டனர். தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
டவுன்டெக்டரின் கூடுதல் எண்கள், காலை 10 மணியளவில் தொடங்கிய செயலிழப்பு, உள்நுழைவு சிக்கல்கள், அட்டவணைகள் மற்றும் கட்டணங்களைத் தேடுவதில் சிரமங்கள் மற்றும் பரிவர்த்தனை பிழைகள் ஆகியவற்றை வெளிக்காட்டியது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் செயலழிப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வமான விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!