பள்ளிக்குள் நுழைந்த சிறுவன் மீது விழுந்த இரும்பு கேட்.. பரிதாபமாக பலியான சோகம்!

 
ஸ்வரூப் தீபக்ராஜ் மானே

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், கார்வீர் தாலுகா, கெர்லே கிராமத்தில் கன்யா குமார் வித்யாமந்திர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கெர்லே கிராமத்தை சேர்ந்த ஸ்வரூப் தீபக்ராஜ் மானே என்ற 13 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவன் பலி

நேற்று வழக்கம் போல் சிறுவன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​பள்ளியின் இரும்பு கதவு சிறுவன் மீது விழுந்தது. கதவு துருப்பிடித்து இருந்ததால், பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.

போலீஸ்

உடனடியாக சிறுவனை மீட்டு பள்ளி ஆசிரியர்கள் நெய்வாகம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று வந்தான். வழக்கம் போல் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து வரும் போது இந்த விபரீதம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web