கெளதம் அதானி கைதாகிறாரா? ரூ.2,100 கோடி லஞ்ச பணம் கைமாறியதா?!

 
கெளதம் அதானி

சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக கௌதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 குற்றப்பத்திரிகையில் அதானி உடன் சேர்ந்து இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாகிகளான சாகர் ஆர் அதானி மற்றும் வினீத் எஸ் ஜெயின் ஆகியோர் கூட்டாட்சி சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

கெளதம் அதானி

“ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு கோடிகளில் லஞ்சம் கொடுக்க அதானி தரப்பு திட்டமிட்டனர்" என்று நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் பிரியன் பீஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருக்கலாம் என்றும், அந்த நிறுவனத்தின் நிறுவனர் அதானியின் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. 

சோலார் சூரிய வெளிச்சம் சக்திஅ

அதானி குழுமத்தின் அமெரிக்க அலுவலகங்களுக்கான தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web