கேன்சருக்கு தீர்வு கஷாயமா?! முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு ரூ.850 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

 
நவ்ஜோத் சிங் சித்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி 850 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, நவ்ஜோத் சிங் சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தனது 4 ஆம் நிலை புற்றுநோயை 10 நாட்களுக்குள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி குணப்படுத்தியதாகக் கூறியிருந்தார். அவரது கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்குப் புறம்பானது என்று கூறி அவருக்கு எதிராக சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் உறுப்பினரும் மருத்துவருமான குல்தீப் சோலங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அலோபதி மருந்துகளின்றி தனது மனைவி 4-ம் நிலை புற்றுநோயில் இருந்து அற்புதமாக குணமடைந்துவிட்டதாக நவ்ஜோத் சித்து கூறியது கேள்விக்குரியது மற்றும் பொய்யானது. இது புற்றுநோயுடன் போராடுபவர்களுக்கு அலோபதி மருந்துகளின் மீதான நம்பிக்கையை இழந்து அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

நவ்ஜோத் சித்து

சித்துவின் கருத்தைத் தொடர்ந்து அவருக்கு சொசைட்டி  சார்பில் ரூ.850 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நவ்ஜோத் கவுர் தனது கோரிக்கையை நிரூபிக்க மருத்துவ ஆதாரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அவர் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு பதிலளிக்கத் தவறினால், 850 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். "எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பம்பூ போன்றவற்றை உட்கொண்டால் புற்றுநோய் குணமாகும் என்று கூறும் உங்கள் கணவரின் புற்றுநோய் சிகிச்சை முறையை ஆதரிக்கிறீர்களா?"  என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web