பிக்பாசில் கமலின் சம்பளம் இத்தனை கோடியா?!

 
பிக்பாசில் கமலின் சம்பளம் இத்தனை கோடியா?!


தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக அமைந்திருப்பது பிக்பாஸ். இந்நிகழ்ச்சி சீசன் 5 தொடங்க இருக்கிறது. சீசன் 1 முதலே இந்நிகழ்ச்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி சீசனுக்கு சீசன் பரபரப்பு கூடிக்கொண்டே போவதால் ரசிகர்களின் பட்டாளமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிக்பாசில் கமலின் சம்பளம் இத்தனை கோடியா?!

அதே போல் இதனை தொகுத்து வழங்கி வரும் கமலின் சம்பளமும் ஆண்டுக்காண்டு ஏறிக்கொண்டே போகிறது.ஐந்தாம் சீசனுக்கான சம்பளத்தை கமல் முன்பே வாங்கி விட்டதாகவும், அதனை தேர்தலுக்கு செலவு செய்துவிட்டார் எனவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.இன்னும் சில வாரகங்ளில் பிக் பாஸ் 5 ஒளிபரப்பை தொடங்கி விடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாசில் கமலின் சம்பளம் இத்தனை கோடியா?!

அதே வேளையில் கமல் ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்கவும், ஒரு நாள் ஷூட்டிங்கில் பங்கேற்கவும் ரூ 4 கோடி ரூபாய் சம்பளமாக பெறப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல் தோன்றினாலும் அதன் ஷூட்டிங் ஒரே நாளில் தான் எடுக்கப்படும். அதனால் ஒரு வாரத்திற்கு 4 கோடி வீதம் 15 வாரங்களுக்கு சுமார் 60 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.பிக் பாஸ் முதல் சீசனில் கமல் இதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web