இஸ்ரேல் VS ஈரான்.. ராணுவ பலத்தில் பெரும் போட்டா போட்டி.. ஷாக் தகவல்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை முற்றிலுமாக அழிப்பதாக உறுதியளித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. இதனிடையே ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பிறகு, இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை குறிவைத்து, லெபனானில் இயங்கும் அமைப்பு பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் பிற சாதனங்களை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து சைபர் தாக்குதலை நடத்தியது. மேலும், ஈரான் மீதான வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஒரு வருடமாக ஹமாஸ் ஆயுதக் குழுவை தாக்கி வரும் இஸ்ரேல் தற்போது ஹமாஸ் மீதான தாக்குதலை குறைத்து ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் பெலனான் பகுதியில் ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் 184 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. இச்சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு உதவவும், ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தவும் அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்போது நேரடி மோதலில் இருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரானின் பலம் என்ன என்று பார்ப்போம்.
இஸ்ரேல் | ஈரான் | |
பரப்பளவு | 21,937 சதுர கி.மீ | 16.48 லட்சம் சதுர கி.மீ |
மக்கள் தொகை | 90.43 லட்சம் | 8.75 கோடி |
ராணுவ வீரர்கள் | 1.70 லட்சம் | 6.10 லட்சம் |
ராணுவத்திற்கான நிதி | 84,000 கோடி | 2.05 லட்சம் கோடி |
விமானப்படை | 612 | 551 |
போர் விமானங்கள் | 241 | 186 |
பீரங்கிகள் | 1,996 | 1,370 |
ராக்கெட் லாஞ்சர் | 150 | 775 |
போர்க் கப்பல்கள் | 67 | 101 |
நீர் முழ்கிக் கப்பல்கள் | 5 | 19 |
எண்ணிக்கைக்கு அப்பால் இஸ்ரேலின் தொழில்நுட்பம் அபாரமானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு வலுவாகக் காணப்படுகிறது. அதேபோல், ஈரானிடம் ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் போன்ற அமைப்புகளின் பலம் உள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!