இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்.. ஐ.நா. ஊழியர்கள் உட்பட 153 பேரை விடுவித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

 
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில், ஏமனில் செயல்படும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த போரில் ஹவுத்தி ஆயுதக் குழுவை ஆதரித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தினர்.

இஸ்ரேல் - ஹமாஸ்

மேலும், ஹமாஸை ஆதரிப்பதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைத் தாக்கியுள்ளனர். சரக்குக் கப்பல்களில் பயணிக்கும் மாலுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமனில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பணிபுரியும் ஐ.நா. ஊழியர்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளனர். அவர்கள் அரசு சாரா நிறுவனங்களின் ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தங்கள் காவலில் உள்ள 153 ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அரசு சாரா நிறுவன ஊழியர்களை விடுவித்துள்ளனர். 153 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேலும் 7 ஐ.நா. ஊழியர்களை கைது செய்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தங்களது ஊழியர்கள் கைது செய்யப்பட்டதால் ஏமனில் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக ஐ.நா. அமைப்பு ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web