முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்த ஐ.டி நிறுவனம்.. போராட்டத்தில் குதித்த 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்!

கோவையின் ஆர்.எஸ்.புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ஃபோகஸ் எடுமேடிக்ஸ் (Focus Edumatics) என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த ஐடி நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நிறுவனத்தில் பணிபுரிந்த பல இளைஞர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "எங்களை திடீரென பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர்களுக்கு settlement, graduvity போன்றவை வழங்க வேண்டும்" என்று கோரி மனு அளித்துள்ளனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், "தொடக்க நிலை ஊழியர்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக எங்களுக்கு மின்னஞ்சல் மட்டுமே வந்தது.
நடப்பு மாதத்திற்கான சம்பளம் மற்றும் பணிநீக்கத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் சான்றிதழ்களை அவர்கள் வழங்க வேண்டும். அவர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்யாவிட்டாலும் அனைவருக்கும் விடுப்பு உத்தரவுகள் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இது ஆப்ஸ்கண்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்த வேலையில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, உடனடி நடவடிக்கை தேவை, ”என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!