“மும்பை பெண்கள் தான் மாதவிடாய் வலி குறித்து அங்கலாய்கிறார்கள்...” பிரபல நடிகரின் மகள் சர்ச்சைக் கருத்து!
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் டினா மாதவிடாய் வலி குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா - சுனிதா அஹுஜாவின் மகள் டினா, சமீபத்தில் தனது தாயாருடன் இணைந்து ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்டு பேசும் போது, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் குவிந்து, சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைக் குவிந்து வருகிறது. ரசிகர்கள் டினாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அந்த நேர்காணலில் பேசிய டினா, பெண்களின் ஆரோக்கியம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். மும்பையிலும், டெல்லியிலும் தான் பெண்கள் மாதவிடாய் காலங்களில் வலி இருப்பதாக கூறி அங்கலாய்கின்றனர். மாதவிடாய் காலங்களில் கிராமப்புற, நகர்ப்புற பெண்களுக்கு இடையேயான வலி மாறுபடும். மும்பை, டெல்லியைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலங்களில் வலி குறித்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இவை உளவியல் ரீதியிலானதாக கூற இருக்கலாம்” என்றார்.
இந்த நேர்காணலில் தனது வழக்கத்திற்கு மாறான கருத்துகளுடன் உரையாடலைத் தொடங்கிய டினா, கிராம வாழ்க்கையை ஒப்பிடுகையில், நகர்ப்புற வாழ்க்கை முறைக்கும் மாதவிடாய் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி பேசியவர், “நான் பெரும்பாலும் சண்டிகரில் தங்கி இருக்கிறேன். டெல்லி, மும்பையைச் சேர்ந்தவர்கள் மாதவிடாய் கால வலி குறித்டு பேசுகையில் மாதவிடாய் காலங்களில் வலியை உணராதவர்களும் கூட உளவியல் ரீதியாக மாதவிடாய் காலங்களில் சோர்ந்து போகிறார்கள். அதே சமயம் பஞ்சாப் மற்றும் பிற சிறிய நகரங்களில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் எப்போது வருகிறது அல்லது மாதவிடாய் நிற்கிறது என்பதை கூட உணர மாட்டார்கள். அவர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
மாதவிடாய் வலிக்கு வாழ்க்கை முறையும், நம்முடைய உணவுமுறையும் கூட தொடர்புடையது. எனக்கு மிகவும் பப்ளியான உடல்வாகு. இதுவரை எனக்கு மாதவிடாய் காலங்களில் முதுகுவலி மற்றும் தசைப்பிடிப்புகள் வந்ததில்லை. ஆனால் இது குறித்து இங்கே நிறைய பேர் பேசுவதைப் பார்க்கிறேன். பெரும்பாலான பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டின் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.
டினாவின் தாயார் சுனிதா அஹுஜா கூறுகையில், டினாவின் கருத்தை ஆமோதித்து, “உங்கள் உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே நீங்கள் உணவு முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுங்கள். பின்னாளில் நெய் சேர்த்தது எனது இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தி விட்டது என்று என்னைக் குறைச் சொல்லாதீங்க” என்றார்.
டினா கடந்த 2015ம் ஆண்டு 'செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட்' படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஜிப்பி கிரேவால் மற்றும் தர்மேந்திராவுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் பெரிய திரையில் இருந்து விலகி இருந்தார்.
"உண்மை என்னவென்றால், எல்லோரும் ஒரே மாதிரியான வலியை அனுபவிப்பதில்லை. வலியின் அளவு பெண்ணுக்குப் பெண் வேறுபடும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!