பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை... 2 பேர் கைது!
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இது திகழ்கிறது.

கடந்த வாரம் இந்த அருங்காட்சியகத்தில் முகமூடியுடன் சிலர் நுழைந்தனர். பின்னர் மின் கருவிகளை பயன்படுத்தி வைர கிரீடம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.

அவற்றின் மதிப்பு சுமார் ரூ.898 கோடி ஆகும். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து குற்றவாளிகள் வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
