ஜாலி தான் .... அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை.‌‌..!

 
விடுமுறை

 
ஜனவரி14ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

பொங்கல்


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி 15, 16, 18, 19 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பல தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.  

பொங்கல்

அதன்படி  மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 17ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில்  ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமையை பணி நாளாக அறிவித்தும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web