புராட்டாசி முடிஞ்சிடுச்சு... ஞாயிற்றுக்கிழமை வேற... அதிகாலையிலேயே மீன்களை வாங்க குவிந்த மக்கள்!

 
மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

இந்த வருடம் பெரும் சங்கடமாக புரட்டாசி மாதம் முடிந்த பின்பும், அடுத்தடுத்து வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையுமாக வந்து விட்டது பலரையும் நெளிய செய்தது. புரட்டாசி மாதம் முடிந்தவுடனே பலர் அசைவ உணவு வகைகளை வெளுக்கத் துவங்கியிருந்த நிலையில், வெள்ளி, சனி விரதம் இருந்தவர்கள் இன்னும் அசைவ உணவுகளை ருசி பார்க்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலையிலேயே மீன் மார்க்கெட்களில் மக்கள் குவிய துவங்கி விட்டனர். பல உணவகங்களில், பிரியாணி கடைகளில் முன்பை விட அதிகளவில் மக்கள் குவிய துவங்கியுள்ளனர். சென்னை உட்பட வெளி மாவட்டங்களிலும் பிரியாணி கடைகள் மீண்டும் களை கட்ட துவங்கியுள்ளது.

மீன் மீனவர்கள் இறைச்சி

புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாளுக்கு விரதம் இருந்து வந்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து கொண்ட நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையிலும் இன்று அதிகாலை முதலே கூட்டம் அதிகரிக்க துவங்கியிருந்தது. 

மீன் கடை மார்க்கெட் அசைவம்

மீன் மார்க்கெட்களில் இன்று காலை கூட்டம் அலைமோதிய நிலையில், மீன்களின் விலையும் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பால் சுறா, தோல்பாறை உட்பட பல வகையான மீன்கள் அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

சென்னையில் மட்டுமல்லாமல் கடலூர், தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களிலும் புராட்டாசி முடிந்த நிலையில், மீன் விற்பனை களைக்கட்டியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலும் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த ஏராளமான மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய நிலையில், மீன்கள் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர்.

இதனால் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. சீலா ஒரு கிலோ ரூ.1,200க்கு விற்பனையானது. விளை மீன் கிலோ ரூ.400 வரையும், பாறை மற்றும் ஊளி மீன்கள் கிலோ ரூ.350 வரையும் விற்பனையானது. மீன்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!