அதிர்ச்சி... ’ஜெயிலர்’ பட நடிகர் திருச்செந்தூர் கோவில் கருவறையை வீடியோ எடுத்த விவகாரம்... போலீசில் புகார்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் துணை நடிகராக நடித்தவர் செல்வா. இவர் இன்ஸ்டா பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர் திருச்செந்தூருக்கு சென்று வந்த பயணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வருவதும், அங்கு புகைப்படம் எடுப்பதுமாக இருந்தார்.
பின்னர் கோயிலுக்குள் சென்றதும் அங்கிருந்த மூலவரின் காட்சிகளும் வெளியாகியிருந்தது. மேலும் அவர் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி எடுத்துச் சென்றார், எல்லாவற்றுக்கும் மேல் மூலவரை எந்த கோயிலிலும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கக் கூடாத நிலையில் இவர் எப்படி எடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் செல்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் கோயிலின் புனிதத் தன்மையை காக்க பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!