இன்று மாலையுடன் ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு நிறைவு!

 
ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது . இன்றுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக் கொள்வதற்கான முன்பதிவு நிறைவடைகிறது. தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருகிற ஜனவரி 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும், அலங்காநல்லூரில் 16ம் தேதியும் நடைபெற உள்ளது. 

ஜல்லிக்கட்டு மாடுகள்

இந்நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது .இந்த போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஜல்லிக்கட்டு

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற உள்ளது. அதற்குள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளையுடன், உரிமையாளர் ஒருவரும், காளையுடன் நன்கு பழக்கமுள்ள உதவியாளர் ஒருவரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web