4,53,105 கன்டெய்னர்கள்! 30 நாட்கள்! கொரோனா காலத்தில் சாதனைப் படைத்த துறைமுக கழகம்!

 
4,53,105 கன்டெய்னர்கள்! 30 நாட்கள்! கொரோனா காலத்தில் சாதனைப் படைத்த துறைமுக கழகம்!

கொரோனா காலத்திலும் சாதனைப் படைத்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக கழகம். முன்னணி துறைமுக கழகங்களில் ஒன்றான, ஜவஹர்லால் நேரு துறைமுக கழகம், சரக்கு கன்டெய்னர்களை கையாள்வதில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4,53,105 கன்டெய்னர்களை கையாண்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் இந்த துறைமுக கழகம் 3,52,735 கன்டெய்னர்களை கையாண்டது.

இதன் மூலம் ஜவஹர்லால் நேரு துறைமுக கழகம் 28.45 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த துறைமுக கழகத்தில் இயங்கும் என்எஸ்ஐஜிடி நிறுவனம் (நவா சேவா (இந்தியா) கேட்வே டெர்மினல் என்ற நிறுவனம் 98, 473 கன்டெய்னர்களை கையாண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இது மிக அதிகளவிலான எண்ணிக்கை ஆகும்.

4,53,105 கன்டெய்னர்கள்! 30 நாட்கள்! கொரோனா காலத்தில் சாதனைப் படைத்த துறைமுக கழகம்!

ஜவஹர்லால் நேரு துறைமுக கழகம், உள்நாட்டு கன்டெய்னர் கிடங்குகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 79, 583 கன்டெய்னர்களை கையாண்டுள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுக கழகத்தின் ஒட்டுமொத்த மேம்பட்ட செயல்பாட்டுக்கு கன்டெய்னர் ரயில் ஆப்ரேட்டர்கள், ரயில்வே மற்றும் துறைமுக கழகங்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் கூடிய பங்களிப்பை அளித்துள்ளனர்.

4,53,105 கன்டெய்னர்கள்! 30 நாட்கள்! கொரோனா காலத்தில் சாதனைப் படைத்த துறைமுக கழகம்!

இது தவிர, கடந்த மாதத்தில் ஜவஹர்லால் நேரு துறைமுக கழகம், 9 மின்சார வாகனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது. இதற்காக துறைமுக கழக வளாகத்தில் பிரத்தியேக சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஜவஹர்லால் நேரு துறைமுக கழகத்தின் திட கழிவு மேலாண்மை ஆலையில் பயோ கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

From around the web